நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோம்!

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோம்!

செய்திகள் 5-Sep-2013 4:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும், நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம். இதுவரை ஏற்ற அனைத்து வேடங்களும் நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லை. சுமார் இரண்டரை வருடங்களாக சினிமா வட்டாரத்தில் இருந்து விலகி இருந்த ஜீவன், திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரிடம், ‘’நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோம்?’’ என்று கேட்டோம்.

‘’கிருஷண லீலை’ முடிந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் தடைபட்டு போனது. அது ரிலீசாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும். அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் அதிகம், நடித்த படங்கள் குறைவு. அதனால் எனக்கு இந்த இடைவெளி பெரிதாக தெரியவில்லை. இதையெல்லாம் விட சமீபத்தில் தான் என அப்பா இறந்தார். எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார். நான் எதிர்பார்த்த திருப்தி அதில் இருந்தது. அதோடு ஏற்கெனவே நானும் அவரும் ’நான் அவனில்லை’, ‘நான் அவனில்லை 2’, ‘தோட்டா’ என மூன்று படங்களில் இணைந்தோம், வெற்றிப் பெற்றோம். இது நான்காவது முறை. இந்தப் படத்தை தயாரிக்கும் ‘விஷ்வாஸ்’ சுந்தர் பெரிய தயாரிப்பாளர். அதனால் மீண்டும் வருவேன்’’ என பிரேக் விட்டவரிடம்,

‘’நீங்கள் நல்லவனா? கெட்டவனா? ரெடிமேட் ஆடைகளை போல் கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே?’’ என்றதும்,

‘’திருட்டு பயலே’ படத்தில் நான் மட்டுமல்ல… சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் என எல்லோருக்குமே நெகடிவ் ரோல் தான். கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன். அதுமாதிரி ‘காக்க காக்க’ படத்தில் முழு வில்லன். ‘நான் அவனில்லை’யில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம். ‘தோட்டா’வில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரரை உருவாக்க முடியும் என்பது மாதிரியான பாத்திரம். இதுபோன்ற சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப் படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு. அதுவும் எனை லைம்லைட்டில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோஷமே. இப்போது மீண்டும் வேட்டை ஆரம்பித்து விட்டேன். நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலைநிறுத்திக் கொள்வேன்’’ என்கிறார் தன்னம்பிக்கையோடு!

குறிப்பு: செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் படம், ‘வென்று வா’ என்றும், அதனை ‘விஷ்வாஸ்’ சுந்தர் தயாரிக்கிறார் என்றும் சென்ற 3—ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், ‘வென்று வா’ தலைப்புக்கு வேறொருவர் உரிமை கொண்டாட, ஜீவன் நடிக்கும் படத்திற்கான புதிய தலைப்பை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர் படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனவு வாரியம் - டிரைலர்


;