தலைவர் ஆனார் ஜி.கே!

தலைவர் ஆனார் ஜி.கே!

செய்திகள் 5-Sep-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக ஜி.கே. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் 19 பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில் தலைவர் உட்பட 15 பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தலைவராக ஜி.கே என்கிற கோபிகாந்த் தேர்வாக, துணை தலைவர்களாக எம்.பிரபாகரன், கே.கதிர், துணைச் செயலாளராக ஆர்.கே.நாகுராஜ், டி.முத்துராஜ், பொருளாளராக எஸ்.சுரேஷ், செயற்க்குழு உறுப்பினர்களாக டி.ஆர்.கே.கிரண், பி.சுரேஷ், உமா சங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். செயலாளர் மற்றும் செயற்க்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;