விஜய்யுடன் மோதும் ரவிமரியா!

விஜய்யுடன் மோதும் ரவிமரியா!

செய்திகள் 5-Sep-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜீவா நடித்த முதல் படமான ‘ஆசை அசையாய்’ படத்தை இயக்கியவர் ரவிமரியா. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மிளகா’, ‘நெத்திலி’ ஆகிய படங்களை இயக்கியரவிமரியா, ‘பழனி’, ‘கோரிப்பாளையம்’, ‘மாத்தியோசி’ என ஏராளமான படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

இயக்குனராக வெற்றி பெற்றதை விட, நடிப்பில் பரவலாக பேசப்பட்டு வரும் ரவிமரியா தற்போது விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் ப்ளாக் காஸ்ட்யூம் மற்றும் மொட்டை தலையுடன் மாறுபட்ட ஒரு வில்லனாக நடித்து வருகிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பான ’ஜில்லா’வில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை நேசன் இயக்க, இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;