முழுக்க முழுக்க இரவில் படம் பிடிக்கப்பட்ட படம்!

முழுக்க முழுக்க இரவில் படம் பிடிக்கப்பட்ட படம்!

செய்திகள் 28-Nov-2013 3:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கேயாரிடம் 12 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர் எம். ஜெயபிரதீப். இவர் இயக்கியிருக்கும் படம் ‘நேர் எதிர்’. இந்தப் படத்தில், ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் ஜெயபிரதீப் கூறும் போது,

‘‘நேர் எதிர்' முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இதன் கதை முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கிறது. எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் இயற்கையாக இருக்கின்றன. ஆனால் மனிதன் இதற்கு நேர் எதிர் மாதிரியாக இருக்கிறான். ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான்,எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான் என்று யாருக்கும் தெரியாது.

எல்லா விலங்குகளின் குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை கதை கருவாக வைத்து உருவாகியுள்ள படம்தான் 'நேர் எதிர்'. படத்தில் வரும் 5 பாத்திரங்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று புரியாதபடி நடக்கும் வித்தியாசமான ஆட்டம்தான் படத்தின் திரைக்கதை. இதில் காதல், நட்பு எல்லாம் இருக்கு. இந்தப் படம் எல்லோருக்கும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுக்கும்” என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;