பிரபுதேவாவுக்கு மெழுகுச் சிலை!

பிரபுதேவாவுக்கு மெழுகுச் சிலை!

செய்திகள் 4-Sep-2013 2:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வாண்டட்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரவேசித்த நம்ம ஊர் பிரபுதேவா, இன்று பாலிவுட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குனர்! தற்போது ஷாஹித் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, அடுத்து அக்‌ஷய்குமார் மற்றும் சல்மான் கான் நடிப்பிலும் ஒவ்வொரு படங்களை இயக்க இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் புகழ்பெற்று விளங்கி வரும் பிரபு தேவாவை கௌரவப்படுத்தும் விதமாக புனேயிலுள்ள பிரபல லோனவால செலிபிரிட்டி வாக்ஸ் மியூசியத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு, சமீபத்தில் அதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில் என்ன ஒரு புதுமை என்றால் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை நிஜ பிரபுதேவாவே திறந்து வைத்தது தான்! இது குறித்து பிரபுதேவா, ‘‘என் இனிய நண்பர்களே, என்னுடைய மெழுகுச் சிலையை நானே திறந்து வைத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் மனதை ரொம்பவும் குதூகலப்படுத்திய ஒரு நிகழ்ச்சி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;