‘வில்லா’வில் புதிய முயற்சி!

 ‘வில்லா’வில் புதிய முயற்சி!

செய்திகள் 3-Sep-2013 6:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் ‘பீட்சா 2 வில்லா’. தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஒலி அமைப்பு ‘அட்மாஸ் டால்பி’ என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஹாலிவுட் திரைப்படங்களில் பின்பற்றி வருவதுபோல் பிரத்தியேகமாக ’சவுண்ட் டிசைனிங்’ செய்யப்பட்டு படத்தின் இசை மற்றும் ஒலியை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களை போல் ஒரு தமிழ் படத்திற்கு சவுண்ட் டிசைனிங் செய்வது முதன் முதலாக இந்தப் படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அட்மாஸ் டால்பி தொழில்நுட்ப வசதி இல்லாத தியேட்டரில் பார்க்கும்போது கூட, ரசிகர்கள் வித்தியாசமான ஒலி அமைப்பை உணரலாம் என்பது இதன் சிறப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;