’தல’ தீபாவளி!

’தல’ தீபாவளி!

செய்திகள் 3-Sep-2013 4:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் - விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு ‘ஆரம்பம்’ என்று தலைப்பு வைத்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க, படம் எப்போது ரிலீசாகும்? என்ற கேள்வியும், குழப்பமும் ரசிகர்களிடையே நிலவி வந்தது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ‘‘அஜித்தின் ‘ஆரம்பம்’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாகவிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, தற்போது படத்தை மெருகேற்றும் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள பாடல்களின் வெளியீட்டு விழா எப்போது என்ற விவரத்தை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது, கொண்டாட காத்திருங்கள்’’ என்று கூறியிருக்கிறார். ஆக, ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ’தல’ தீபாவளி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;