பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஜீவன்!

பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஜீவன்!

செய்திகள் 3-Sep-2013 4:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காக்க காக்க’, ‘திருட்டுப்பயலே’ போன்ற பல படங்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் ஜீவன். இவர் நடிப்பில் கடைசியாக (2009-ல்) வெளிவந்த படம் ’நான் அவனில்லை 2’. இந்தப் படத்திற்குப் பிறகு ஜீவன் நடிப்பில் இதுவரை எந்தப் படமும் வெளிவராத நிலையில் அடுத்து, ‘வென்று வா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவன். இந்தப் படத்தை விஷ்வாஸ் சுந்தரின் ‘சன் மூன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஜீவன் நடித்த ‘நான் அவனில்லை’ படத்தை இயக்கிய செல்வாவே இந்தப் படத்தையும் இயக்க, ஜீவனுக்கு ஜோடியாக நடிகை ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா நடிக்க இருக்கிறார்.

இவர்களுடன் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கும் இப்படத்திற்கு விஜய் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. படத்தின் கதைப்படி, எந்த வம்பு தும்புக்கும் போகாத இளைஞர் ஜீவன். ஒரு சமயத்தில் இவர் ஒரு பிரச்சனியில் சிக்கி, பெரிய சதித்திட்டத்தில் மாட்டி கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் படமாம் ’வென்று வா’.

கே.பாலச்சந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம் தயாரிக்க, ஜீவன் நடிப்பில் ஸெல்வன் இயக்கியுள்ள ’கிருஷ்ண லீலை’ என்ற படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;