பாலிவுட்டுக்குச் செல்லும் மைனா!

பாலிவுட்டுக்குச் செல்லும் மைனா!

செய்திகள் 3-Sep-2013 4:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, ’துப்பாக்கி’ ஹிந்தியில் ரீ-மேக் ஆக, அதை ஏ.ஆர்.முருகதாஸே இயக்கி வருகிறார். அதே நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படமும் ஹிந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. ஆனால் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை. ‘வானம்’ புகழ் கிருஷ் இயக்குகிறார். தமிழ் ’ரமணா’வில விஜயகாந்துடன் சிம்ரன், ஆஷிமா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். ஆனால் ஹிந்திக்காக கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய, கதையில் ஒரு ஹீரோயின் மட்டுமே இருப்பதால் அதற்கான தேர்வு நடந்து வந்தது. அதில் ‘மைனா’ புகழ் அமலா பால் தேர்வாகி, அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இது அமலா பால் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;