போலீசுக்குப் போன எஸ்.வி.சேகர்!

போலீசுக்குப் போன எஸ்.வி.சேகர்!

செய்திகள் 3-Sep-2013 12:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘1980-ல் அரங்கேற்றம் செய்து இன்றுவரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ள என்னுடைய ’மகாபாரதத்தில் மங்காத்தா’ நகைச்சுவை நாடகத்திற்கு எதிராக விலாசமில்லாத ‘இந்து மகா சபா’ என்ற அமைப்பு சென்னை முழுவதும் என் புகைப்படத்துடன், என்னை மிக தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது.

சம்பந்தபட்ட அமைப்பின் மீதும், நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;