கீதாஞ்சலி டூ ஜில்லா!

கீதாஞ்சலி டூ ஜில்லா!

செய்திகள் 3-Sep-2013 1:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மலையாள படம் ‘கீதாஞ்சலி’. இந்தப் படத்தின் கதை, ’மணிச்சித்திரத் தாழ்’ படத்தில் மோகன்லால் ஏற்று நடித்திருந்த டாக்டர் சன்னி கேரக்டரின் தொடர்ச்சியாக உருவகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தப் படத்தில் நடித்துள்ள மோகன்லால், ‘‘ப்ரியதர்சனின் ’கீதாஞ்சலி’யில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் முடிந்துவிட்டது, அடுத்து விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் செல்கிறேன்’’ என்று டுவீட் செய்திருக்கிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் நேசன் இயக்கி வரும் ’ஜில்லா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், மோகன்லாலுக்கு ஜோடியாக பூர்ணிமா ஜெயராமும் நடிக்க, படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;