முதலிடத்தில் சூப்பர் ஸ்டார்!

முதலிடத்தில் சூப்பர் ஸ்டார்!

செய்திகள் 3-Sep-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல என்.டி.டி.வி. நிறுவனம் தனது 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. அதாவது கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? யார்? என்ற கணக்கெடுப்பு அது. இணையதளம் மூலம் நடத்தும் இந்த கருத்துக்கணிப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த இந்திய பிரபலங்களை தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்க்கர், அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாட்டா என அரசியலுக்கு அப்பாற்பட்ட வி.ஐ.பி.க்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். இது ஆன்லைன் மூலம் நடக்கும் கருத்துக்கணிப்பு என்பதால் தினந்தோறும் யாருக்கு என்ன இடம் என்பதை அந்த நிறுவன இணையதளம் வெளியிட்டு வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன் 5-வது இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 4-வது இடத்திலும், தோனி 7-வது இடத்திலும், அமிதாப்பச்சன் 10-வது இடத்திலும் இருந்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;