அமீர், பாண்டிராஜ் பாராட்டிய கதை!

அமீர், பாண்டிராஜ் பாராட்டிய கதை!

செய்திகள் 3-Sep-2013 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சசிதரன் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘கடை எண் 6’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை ‘கிரேட் சர்க்கிள் என்டர்டெய்னர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கமல் ஏகாம்பரம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல ஹீரோ ஒருவருடன் மூன்று புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கும் இந்தப் படம் குறித்து இயக்குனர் சசிதரன் கூறும்போது, ‘‘வாராயோ வெண்ணிலாவே படத்தை நான் முதலில் ‘பீட்சா’ பட தயாரிப்பாளருக்கு இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போனது.

அதற்கு பிறகு ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலரை பார்த்து எனக்கு ‘கடை எண் 6’ படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் கமல் ஏகாம்பரம். ‘கடை எண் 6’ காமெடி கலந்த த்ரில்லிங் படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதையை கேட்ட இயக்குனர்கள் ‘பசங்க’ பாண்டிராஜ், அமீர் ஆகியோர் ‘நல்ல கதை’ என்று பாராட்டினார்கள்’’ என்கிறார் சசிதரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;