பெரிய நடிகைக்கு பெரிய சம்பளம்!

பெரிய நடிகைக்கு பெரிய சம்பளம்!

செய்திகள் 2-Sep-2013 3:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் மலையாள சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக திகழ்ந்தவர் மஞ்சு வாரியர். பல பவர்ஃபுல்லான கேரக்டர்களில், யதார்த்தமாக நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர், நடிகர் திலீபை காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தனது சினிமா மார்க்கெட் உச்ச நிலையில் இருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டிலான மஞ்சு வாரியரின் இடத்தை இதுவரை யாரும் நிரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தாலும் கணவர், குழந்தைகள், குடும்பம் என்றிருந்த இவர், சமீபத்தில் ‘பிக் பி’ அமிதாப் பச்சனுடன் ஒரு நகைக் கடை விளமபரத்தில் தோன்றி நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கவும் அழைப்பு வர, அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியர். இன்னும் பெயர் வைக்காத இந்தப் படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க இருக்கிறார்.

ஏற்கெனவே பல மலையாள படங்களில் மோகன்லாலுடன் நடித்திருக்கும் இவர், 15 வருடங்களுக்குப் பிறகு நடிக்க இருக்கும் இந்தப் படத்திற்காக மலையாளத்தில் இதுவரை எந்த நடிகையும் கேட்டிராத, வாங்காத பெரிய சம்பளம் கேட்டிருப்பதாகவும், அதை தயாரிப்பு தரப்பினர் கொடுக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் மீண்டும் நடிக்க வருவது குறித்து கேள்விப்பட்ட பல மலையாள நடிகைகள் கலங்கி போயுள்ளனராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;