அடுத்த சுப்ரமணியபுரம்!

அடுத்த சுப்ரமணியபுரம்!

செய்திகள் 2-Sep-2013 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மயில் மாஸ் மீடியா’ வழங்க, இலாலப்பேட்டை எம்.மயில் தயாரித்திருக்கும் படம் ‘தமிழ் செல்வனும் 50 கிமீ கலைசெல்வியும்’. புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குனர் சுராஜிடம் உதவியாளராக பணியாற்றிய பி.பாண்டியன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்திரா பார்ஸ் இசை அமைத்திருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட, இயக்குனர் பவித்ரன், தயாரிப்பாளர் பி.அல.தேனப்பன், ஸ்டன்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், கிரிதர்லால் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய பி.எல்.தேனப்பன், ''பெரிய பட்ஜெட்டில் உருவாகி, சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் நல்ல கதை அம்சத்துடன், சிறிய பட்ஜெட்டில் தயாரான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ’சுப்ரமணியபுரம்’ படம் மாதிரி சிறிய பட்ஜெட்டில், நல்ல திரைக்கதை அமைப்புடன் உருவாகியுள்ள இந்தப் படமும் அந்த வரிசையில் வெற்றி பெறும்’’ என்று வாழ்த்திப் பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;