ஆர்யாவைப் பிடிக்கும்... நடிகை காவ்யா!

ஆர்யாவைப் பிடிக்கும்...  நடிகை காவ்யா!

செய்திகள் 2-Sep-2013 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல விளம்பர மாடல் அழகி காவ்யா ஷெட்டி கதாநாயகியாக நடித்து வரும் படம் ' ஷிவானி'. இந்தப் படத்தில் நடித்து வருவது குறித்து காவ்யா ஷெட்டி கூறும்போது, ‘’ஷிவானி’யில் என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருக்கு. படப்பிடிப்பு குழுவினரின் பாராட்டும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ஷிவானி’ ஒரு திகில் படம். நான் இயல்பாகவே பயந்த பெண். இரவில் தனியாக செல்ல அச்சம் தான்.

ஆனால் பயம் பேய் , பிசாசினால் அல்ல! மனித உருவில் திரியும் மிருகங்களால் தான்! பெண்களுக்கு எதிராக தொடரும் வன் கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது’’ என்று கூறியிருப்பதோடு, ‘’நிறைய ரசிகைகள் உள்ள நடிகர் ஆர்யா தனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர்’ என்றும் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவம் - காரிருல்லே மேக்கிங் வீடியோ


;