உஸ்தாத் ஹோட்டலில் விக்ரம் பிரபு!

உஸ்தாத் ஹோட்டலில் விக்ரம் பிரபு!

செய்திகள் 2-Sep-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரீ-மேக் ஆகும் மலையாள படங்களின் வரிசையில் அடுத்து தமிழில் ரீ-மேக் ஆக இருக்கும் மலையாள படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’ மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவரது தாத்தாவாக முக்கிய கேரக்டரில் திலகன் நடித்திருந்தார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர், கதாநாயகி, இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டலை’ தயாரித்த லிஸ்டின் ஸ்டீஃபனே தமிழிலும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். ‘டிராஃபிக்’ மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக் ஆன ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை ராதிகா சரத்குமாருடன் இணைந்து தயாரித்தவர் லிஸ்டின் ஸ்டீஃபன் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;