‘மைனா’ நடிகரின் புதிய படம்!

‘மைனா’ நடிகரின் புதிய படம்!

செய்திகள் 2-Sep-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மனதில் மாயம் செய்தாய்’. இந்தப் படத்தில் ‘மைனா’ படத்தில் போலீஸ்காரராக வந்து கலக்கிய சேது, மற்றும் பிரின்ஸ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்க, ரிச்சா பெனாய், திஷா பாண்டே ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் சுரேஷ் பி.குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மணிகாந்த் கத்ரி இசை அமைத்திருக்க, படத்தின் ஒரு பாடலை இன்று ‘பிக் எஃப்..எம்.’ வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ‘’இந்த வருடத்தின் மிகச் சிறந்தப் பாடல்களின் வரிசையில் ’மனதில் மாயம் செய்தாய்’ படத்தின் பாடல்களும் இடம் பிடிக்கும்’’ என்று கூறியிருக்கும் படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் பத்ரி, பிரபல இசை கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் இசை வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆளுக்கு பாதி 50-50 - டீசர்


;