‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திற்கு ‘அனேகன்’ என்று பெயர் வைத்துள்ளனர். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் அழகி அமிரா தஸ்தர் நடிக்கிறார். இவர், ‘இசாக்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படத்தில் கார்த்திக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் துவங்கியது. கே.வி.ஆனந்த், தனுஷ் முதன் முதலாக இணையும் இந்தப் படத்திறகு கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறதாம் ’அனேகன்’.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபு தேவா, சனந்த், ரம்யா நம்பீசன் முதலானோர் நடித்துள்ள படம்...
தமிழ் சினிமா வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள்...
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு...