செப்டம்பர் 9-ல் கோச்சடையான்!

செப்டம்பர் 9-ல் கோச்சடையான்!

செய்திகள் 2-Sep-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’. ரஜினிகாந்தின் டபுள் ரோல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, தீபிகா படுகோனே, ஷோபனா, சரத்குமார், ஆதி, ருக்மிணி விஜயகுமார், ஜாக்கி ஷெராஃப், நாசர் போன்ற நட்சத்திர கூட்டணி, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம், பல புதிய தொழில் நுட்பங்களுடன் உருவாகி வரும் படம் என ஏராளமான ’ஸ்பெஷல்கள்’ உள்ள இந்தப் படத்தின் முதல் டீஸர் வருகிற 9—ஆம் தேதி அதாவது வினாயக சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் விரைவில் வெளியாக இருக்க, தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘விக்ரமசிம்ஹா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம், ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரக ரசிகர்களையும் கவரும் விதமாக பிரம்மாண்டமான முறையில் வித்தியாசமாக உருவாகி இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்காதே ட்ரைலர்


;