ஹேப்பி பர்த்டே பவர்ஸ்டார்!

ஹேப்பி பர்த்டே பவர்ஸ்டார்!

செய்திகள் 2-Sep-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பவர்ஸ்டாரு’க்குப் பிறந்தநாள் என்றவுடன், பொக்கேயோடு டாக்டர் சீனிவாசன் வீட்டிற்குச் சென்றுவிடாதீர்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடுவது ‘ஒரிஜினல் பவர்ஸ்டாரா’ன தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் பபட்லாவில் பிறந்த பவன் கல்யாண் 1996ஆம் ஆண்டு வெளிவந்த ‘அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி’ தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோவாக டோலிவுட்டில் அறிமுகமானார்.

20 படங்களுக்கு மேல் நடித்துள்ள பவன் கல்யாண் வெறும் நடிகர் மட்டுமல்ல. ‘ஜானி’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியிருக்கிறார். அதோடு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரு நல்ல சண்டை ஒருங்கிணைப்பாளரும் கூட. திரைக்கதை எழுதுவதிலும் வல்லவரான பவன், சில படங்களில் நடனப் பயிற்சியாளராகவும், சில படங்களில் பாடகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சமந்தாவுடன் இவர் நடித்துள்ள ‘அத்தரின்டிக்கி தாரெடி’ படம் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. அதோடு தற்போது ‘கப்பார் சிங் 2’ படத்திலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;