தீபாவளி ரேஸில் கார்த்தி!

தீபாவளி ரேஸில் கார்த்தி!

செய்திகள் 2-Sep-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதில் ‘பிரியாணி’ படத்தை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ‘பிரியாணி’ ரிலீஸ் தள்ளிபோகும் நிலையில் இருப்பதால், தீபாவளி வெளியீடாக முதலில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படம் காமெடி கலந்த குடும்பப்படமாக இருப்பதால் தீபாவளி வெளியீடாக வரும்போது ஃபேமிலி ஆடியன்ஸை எளிதில் சென்றடையும் என்பதால் இந்தத் திட்டமாம். யூத்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ‘பிரியாணி’ படத்தை பள்ளி, கல்லூரி விடுமுறை காலமான டிசம்பர் மாதத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;