எம்.ஜி.ஆருடன் கார்த்தி!

எம்.ஜி.ஆருடன் கார்த்தி!

செய்திகள் 31-Aug-2013 3:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற 6-ஆம் தேதி சுந்தர்.சி.யின் ‘மதகஜராஜா’, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இரண்டு படங்கள் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படங்களை பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்கு தியேட்டரில் இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து, எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் டீஸரை தியேட்டரில் கண்டு மகிழும் வாயப்பு தான் அது! ’ஸ்டுடியோ கிரீன்’ சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படம் வருகிற தீபாவளியன்று ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் நிலையில், படத்தின் முன்னோட்ட டீஸரை வருகிற 6-ஆம் தேதி முதல் கண்டு ரசிக்கலாம். வரிசையாக மூன்று ஹிட் படங்களை தந்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;