ஷங்கர், விஜய் அடுத்து சந்தானம்?

ஷங்கர், விஜய் அடுத்து சந்தானம்?

செய்திகள் 31-Aug-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரோல்ஸ் ராய்ஸ்’ ரக கார்கள் என்பது உலக புகழ்பெற்றது. பெரும் பணக்கரர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் இந்த காரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய், தயாரிப்பாளர் ‘கல்பாத்தி’ எஸ்.அகோரம் முதலானோர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த காரை யாரும் நினைத்த மாத்திரத்தில் வாங்கிவிட முடியாது!. அதற்கென்று ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த காரை வாங்க நினைப்பவர் ’ரோல்ஸ் ராய்ஸ்’ நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள், காருக்காக விண்ணப்பித்தவர் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரை பயன்படுத்தக் கூடிய தகுதி படைத்தவரா? என்பதை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்துதான் காரை வழங்குவார்களாம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ’ரோல்ஸ் ராய்ஸ்’ கார் ஒன்றை சொந்தமாக்க வேண்டும் என்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் அந்த காருக்காக சமீபத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல; நடிகர் சந்தானம் தான்! அவருக்கு இந்த கார் கிடைக்குமானால ’ரோல்ஸ் ராய்ஸ்’ காரை வைத்திருக்கும் வி.ஐ.பி.க்களின் பட்டியலில் சந்தானமும் இடம் பெறப் போகிறார்.

என்ன கலர் காருக்காக விண்ணப்பித்திருக்கீங்க பாஸ்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;