மதயானை கூட்டம் இசை வெளியீடு

மதயானை கூட்டம் இசை வெளியீடு

செய்திகள் 31-Aug-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேனி மாவட்டத்தில் வசித்து வரும் இரு குடும்பங்களின் சம்பவங்கள், செயல்முறைகள், பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஜனரஞ்சக படம் ‘மதயானைக்கூட்டம்’. தேனி மற்றும் கேரளா சுற்றியுள்ள இடங்களில் படம் பிடிக்கப்பட்ட இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

அறிமுக நாயகனாக கதிர் நடிக்க, கதாநாயகியாக ஓவியா நடித்துள்ள இப்படத்தை பாலுமகேந்திராவிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை தயாரிதுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். இப்படத்தின் இசை வெளியீடு விழா பிரம்மாண்டமான முறையில் விரைவில் நடைபெறவிருக்கிறது. படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குப்பத்து ராஜா - டீசர்


;