ஹேப்பி பர்த் டே யுவன்…

ஹேப்பி பர்த் டே யுவன்…

செய்திகள் 31-Aug-2013 10:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

1997-ல் வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. ‘அரவிந்தன்’ படத்திலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து வருட காலமாக தொடர்ந்து இசை அமைத்து வரும் யுவன் சங்கர் ராஜாவின் 100-வது படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்து, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ’பிரியாணி’. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்துக்கொண்டு, இசையுலகில் தனக்கான ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, வெற்றிப் பாதையில் சுறுசுறுப்போடு பயணித்துக் கொண்டிருக்கும் யுவனுக்கு இன்று பிறந்த நாள்! இந்த சந்தோஷ தருணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் யுவனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;