உலக மொழிகள் பேச இருக்கும் கௌதமன் படம்!

உலக மொழிகள் பேச இருக்கும் கௌதமன் படம்!

செய்திகள் 30-Aug-2013 1:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சின்னத்திரையில் ‘ஆட்டோ சங்கரின் வாக்கு மூலம்’, ‘சந்தனக்காடு’ ஆகிய தொடர்களையும், வெள்ளித்திரையில் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியவர் வ.கௌதமன். இதில் ‘மகிழ்ச்சி’ படத்தில் கதாநாயகனாக நடித்து, தன்னை ஒரு நடிகராகவும் வெளிப்படுத்திக் கொண்ட கௌதமன் அடுத்து, ஈழ விடுதலை போராட்ட தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா எப்போது, இதில் யார் யார் நடிக்கிறார்கள் போன்ற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார் கௌதமன். இந்தப் படம் ‘பிரேவ் ஹார்ட்’, ‘உமர் முக்தர்’ போன்ற ஆங்கில படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக பிரம்மாண்டமான முறையில் எடுக்க இருக்கிறாராம் கௌதமன். அத்துடன் இந்தப் படம் இந்திய மொழிகள் தவிர, பல்வேறு உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;