ஜே.சதீஷ்குமாரின் புதிய படங்கள்

ஜே.சதீஷ்குமாரின் புதிய படங்கள்

செய்திகள் 30-Aug-2013 12:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் திரைப்பட உலகில் குறுகிய காலத்தில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு, தொடர்ந்து படங்களை விநியோகம் செய்தும், தயாரித்தும் வருபவர் ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவன அதிபர் ஜே.சதீஷ்குமார், ‘ஆரோகணம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ‘பரதேசி’ போன்ற பல படங்களை வெளியிட்ட இவரது சமீபத்திய தயாரிப்பு ‘தங்கமீன்கள்’.

இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்க, அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை தயாரித்து வருவதோடு, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என்ற ஒரு படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்திருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் ஆடியோ இன்று வெளியாக, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் ஆடியோவை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

’ஜே.எஸ்.கே.’யின் அடுத்த ரிலீசாக ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ படமும், அதற்கடுத்து, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படமும் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படங்களை தொடர்ந்து ’தங்க மீன்கள்’ படத்தை இயக்கிய ராம் இயக்கத்தில், ‘தரமணி’ என்ற படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஜே.சதீஷ்குமார். இந்தப் படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க, ‘தங்க மீன்கள்’ படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - டீசர்


;