‘கற்றது தமிழ்’ ராமுடன் இணைந்த ஆண்ட்ரியா!

‘கற்றது தமிழ்’ ராமுடன் இணைந்த ஆண்ட்ரியா!

செய்திகள் 30-Aug-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கற்றது தமிழ்’ என்ற தனது முதல் படத்தின் மூலமே பரவலாக பேசப்பட்ட இயக்குனர் ராம். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘தங்க மீன்கள்’ என்ற படத்தை இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் ராம். ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள ‘தங்கமீன்கள்’ இன்று ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்க, இதே நிறுவன தயாரிப்பில் அடுத்து, ‘தரமணி’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் ராம். ‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்’ என்ற வாக்கியத்தோடு இந்தப் படத்தின் விளம்பரங்கள் வெளியாகியிருக்க, இதில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். ‘தங்க மீன்கள்’ படத்திற்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். ‘கற்றது தமிழ்,’ ‘தங்க மீன்கள்’ படங்களில் அழுத்தமான கருத்துக்களைச் சொன்ன ராம் இந்தப் படத்திலும் நல்ல ஒரு கருத்தை வலியுறுத்துவார் என்று நம்புவோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோதாதே - டிரைலர்


;