ரஜினியுடன் மோதும் பவர்ஸ்டார்!

ரஜினியுடன் மோதும் பவர்ஸ்டார்!

செய்திகள் 29-Aug-2013 1:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆர்யா சூர்யா’ படத்தின் ப்ரமோஷனுக்காக டெல்லி ஜெயிலிருந்து ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் நிருபர்களை சென்னையில் சந்தித்தார். முன்பை விட கொஞ்சம் மெலிந்து காணப்பட்டார் பவர் ஸ்டார். ஆனால், அவருடைய மேனாரிசம் மட்டும் சிறிதும் மாறாமல் இருந்தது. அவர் பேசும் போது...

"டெல்லி சிறையில் பணிபுரியும் தமிழக போலீசார்தான் அங்கு எனக்கு பாதுகாப்புக் கொடுத்தனர். அவர்கள் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். சிறையில் மட்டும் 1500 பேர் எனக்கு ரசிகர்களாக கிடைத்துள்ளனர். நான் சாதரண மனிதனாக இல்லாமல் நடிகராக இருந்ததால் எனக்கு ஒரு மரியாதை கிடைத்தது. ‘ஆர்யா சூர்யா’ படத்தில் நான் ஆர்யாவாக நடிக்கிறேன். ‘வட போச்சே...’ என்ற பாடலை பாடியிருக்கிறேன், ‘சந்தேகம் சந்தேகம்...’ என்ற பாடலுக்கு ஆடியுள்ளேன். ‘லட்டு’ படத்தை விட இது காமடியாக இருக்கும். என்னுடைய காட்ஃபாதர் ராமாநாரயணன் தயாரிப்பில் இது இரண்டாவது படம். ‘ஆனந்த தொல்லை’ படம் கோச்சடையானுடன் ரிலீஸாகும்" என்றார் சிறிதும் மாறாத புன்னகையுடன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;