இளவயது பிரபுவாக கார்த்தி!

இளவயது பிரபுவாக கார்த்தி!

செய்திகள் 29-Aug-2013 12:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’. இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க பிரபு, சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர். காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபுவுக்கு மகனாக கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்தில் கதைப்படி பிரபுவுக்கு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறது.

இதில் இளவயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இளவயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். வழக்கமாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் தான் நடிப்பார். ஆனால் ஒரு புதுமைக்காக இதில் பிரபுவுக்கு பதிலாக கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, எஸ்.தமன் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பீச்சாங்கை - டீசர்


;