பாலுமகேந்திரா படத்துக்கு 'யு' சர்டிஃபிக்கெட்!

பாலுமகேந்திரா படத்துக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 29-Aug-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார், பாலும்கேந்திரா இயக்கத்தில் ’தலைமுறைகள்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான உறவுகளை அழகாக சித்தரிக்கும் படமாம் இது. இந்தப் படத்தில் தாத்தாவாக பாலுமகேந்திராவும், பேரனாக சசிக்குமாரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பாலுமகேந்திராவின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து விரைவில் ரிலீசாகவுள்ள ’தலைமுறைகள்’ படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பாலுமகேந்திரா இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பது சசிக்குமாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்ததாம் அது இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;