’மதகஜராஜா’வுக்கு ’யு’ சர்டிஃபிக்கெட்!

’மதகஜராஜா’வுக்கு ’யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 28-Aug-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து ரிலீசாக இருக்கும் படம் ‘மதகஜராஜா’. இந்த படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்கிறார். ’ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் வினியோக உரிமையை விஷாலின் சொந்த பட நிறுவனமான ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ பெற்றுக் கொண்டுள்ளது. சுந்தர்.சி படம் என்றாலே அதில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமிருக்காது. இந்த படமும் அப்படி அமைந்திருக்கிறதாம்! சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு ’யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த படம் வருகிற 6—ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ’பட்டத்து யானை’ படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;