சபாஷ் சரியான போட்டி!

சபாஷ் சரியான போட்டி!

செய்திகள் 27-Aug-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கற்றது தமிழ்’ ராம் ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் படம் ’தங்க மீன்கள்’. கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஃபோட்டோன் கதாஸ்’ நிறுவனமும், ஜே.சதீஷ்குமாரின் ’ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில், ஒரு தந்தை – மகளுக்கிடையிலான உறவுகள் அற்புதமாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறதாம்.

படைப்பு ரீதியாக கோலிவுட்டில் பேசப்பட்டு வரும் இப்படம் வருகிற 30ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படம் ரிலீசாகிற அதே நாள் ’பொன்மாலை பொழுது’ என்ற படமும் ரிலீசாகிறது. இந்த படம் தந்தை – மகனுக்கிடையிலான உறவுகளை அழகாக சித்தரிக்கும் படமாம். இந்த படத்தை டாக்டர் வி.ராமதாஸ் வழங்க, கே. அமிர்தா கௌரி தயாரித்திருக்கிறார். ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ஏ.சி.துரை இயக்கியிருக்கிறார்.

இந்த படமும் கோலிவுட்டில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் தந்தை – மகள் மற்றும் தந்தை – மகனுக்கிடையிலான உறவுகளை சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் வெளியாகி போட்டி போட இருக்கிறது. சபாஷ் சரியான போட்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;