விரைவில் வில்லா!

விரைவில் வில்லா!

செய்திகள் 26-Aug-2013 5:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 - வில்லா’. தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்தில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ பட வரிசையில் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்த படத்திறகு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். பல புதுமைகளோடு, வித்தியாசமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற செப்டம்பர் 2—ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;