இறுதிகட்டத்தில் கோச்சடையான்!

இறுதிகட்டத்தில் கோச்சடையான்!

செய்திகள் 26-Aug-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டில் அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, தீபிகா படுகோனே, ஷோபனா, சரத்குமார், ஆதி, ருக்மிணி விஜயகுமார், ஜாக்கி ஷெராஃப், நாசர் என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். பெரும் பொருட் செலவில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகி வரும் இந்த படத்திறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் இந்த படம் தெலுங்கில் ’விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தற்போது தெலுங்கு பதிப்பின் டப்பிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், படம் எல்லா மொழிகளிலும் விரைவில் ரிலீசாக இருக்கிறது என்றும் சமீபத்தில் சௌந்தர்யா அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோச்சடையான்- 'மெதுவாகத்தான்' சாங் ப்ரோமோ


;