தமிழுக்கு வரும் உஸ்தாத் ஹோட்டல்!

தமிழுக்கு வரும் உஸ்தாத் ஹோட்டல்!

செய்திகள் 26-Aug-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வரிசையாக பல மலையாள படங்கள் ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்கும் இந்த சீசனில் அடுத்து ரீ-மேக் ஆக இருக்கும் மலையாள படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’. மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இந்த படத்தை அன்வர் ரஷீத் இயக்க, துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, முக்கிய பாத்திரத்தில் திலகன் நடித்திருந்தார். துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் இந்த படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீஃபன் இது குறித்து கூறும்போது, ‘ ‘’உஸ்தாத் ஹோட்டல்’ எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் யுனிவர்சல் சப்ஜெக்ட். அடுத்து இதை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறேன். தமிழில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;