வசூல் எக்ஸ்பிரஸ்!

வசூல் எக்ஸ்பிரஸ்!

செய்திகள் 24-Aug-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற 9-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி வசூலில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தி திரைப்படம். இந்திய சினிமாவிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இதுவரை தக்க வைத்துக் கொண்டிருப்பது ஆமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ படம் தான்!

ஆனால் இப்போது அந்த சாதனையை ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ முறியடிக்கும் விதமாக கலெக்‌ஷனில் ஜெட் வேகத்தில் போய்கொண்டிருக்கிறது. பாலிவுட் திரையுலக பிரபலங்களின் கணக்குபடி, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெளியான முதல் வாரத்திலேயே 157 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து உலகம் முழுக்க ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விரைவிலேயே ’3 இடியட்ஸ்’ படத்தின் சாதனையை முறியடித்து, இந்திய சினிமா சரித்திரத்தில் இடம் பிடிக்கும் என்று திரையுலக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியை நேற்று மும்பையில் அமர்க்களமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ஷாருக்கான் மற்றும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பட டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;