இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இலவச சிகிச்சை… கல்வி!

இயக்குனர்கள்  சங்க உறுப்பினர்களுக்கு இலவச சிகிச்சை… கல்வி!

செய்திகள் 24-Aug-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தான் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனர் விக்ரமன் தலைவராக தேர்வு பெற்று பதவியேற்று கொண்டார். அதன் பின் சங்க உறுப்பினர்களது நலனை கருத்தில் கொண்டு அவர் பல திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தியும் வருகிறார். அதன் அடிப்படையில் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் இலவசமாக சிகிச்சை பெறும் வகையில் இயக்குனர்கள் சங்கம், எஸ்.ஆர்.எம்.மருத்துவமனையுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று எஸ்.ஆர்.எம். தலைவர் பாரிவேந்தர் முன்னிலையில் கையெழுத்தானது. இது குறித்து இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் கூறும்போது,

‘’எங்கள் சஙகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் சிகிச்சைக்கான விண்ணப்ப படிவமும், அடையாள அட்டையும் விரைவில் அளிக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைகளிலும் உறுப்பினர்கள் இலவச சிகிச்சை பெறலாம். இந்த உதவியை செய்து தந்த பாரிவேந்தர் அவர்களை பாராட்ட விரைவில் விழாவும் நடத்தப்படும்’’ என்றார்.

அதன் பின் பேசிய பாரிவேந்தர், ‘‘இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க விரும்பினால் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகத்தில் இலவச கல்வியும் அளிக்கப்படும்’’ என்று கூறி சங்க உறுப்பினர்களை மேலும் சந்தோஷப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;