மோட்டார் சைக்கிள் பயணம்… அஜித் அறிவுரை!

மோட்டார்   சைக்கிள்  பயணம்…  அஜித்  அறிவுரை!

செய்திகள் 23-Aug-2013 12:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் அஜித் குமார், பைக் மேல் அபரிமிதமான பிரியம் கொண்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். இதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளது அவர் சமீபத்தில் சென்று வந்த மோட்டார் பைக் பயணம்.

இது பற்றி அஜித் கூறியதாவது,
‘‘இந்த மோட்டார் பைக் பயணத்தை ஜாலிக்காக மேற்கொள்ளவில்லை. மோட்டார் சைக்களில் செல்பவர்கள் இடையே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே பைக் பயணம் மேற்கொண்டேன். என் உடையை பார்த்தவர்கள் நான் தோள் மற்றும் கால் முட்டியில் PAD வைத்த உடையையும், ஹெல்மெட்டு அணிந்திருத்தலின் அவசியத்தையும் உணர்ந்திருப்பார்கள்.

வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவர்கள் இது போன்ற பாதுகாப்பான ஆயத்தங்களை செய்துக் கொள்ள வேண்டும். இதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமே என்று கருதாமல் பாதுகாப்புக்கு தானே செலவு செய்கிறோம் என்பதை உணருங்கள். ஒரு M R I SCAN எடுக்கவே 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என புலம்புவோர் ரத்தத்தை இழப்பதை விட வியர்வையை சிந்துவது மேல் அல்லவா ?

என்னுடன் பிரபல கார் பந்தய வீரர் கருண் சந்தோகின் தம்பியும், 'வீரம்' படத்தில் என் தம்பியாக நடிக்கும் சுகைல் சந்தோக் கலந்து கொண்டார் . இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட! நாங்கள் இது போல மேலும் பல பயணங்களை மேற்கொள்ள உள்ளோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யட்சன் - அதிகாரபூர்வ டிரைலர்


;