புது விளம்பர யுக்தியில் ராஜா ராணி!

புது விளம்பர யுக்தியில் ராஜா ராணி!

செய்திகள் 23-Aug-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘ராஜா ராணி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டென்ட் அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

பல புதுமையான விளம்பர யுக்திகளோடு இப்படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். அடுத்து, இந்த படத்தின் மூன்று நிமிட டிரைலர் ஒன்றை இன்று (23-8-13) மாலை 7 மணிக்கு விஜய் டிவி, சன் டிவி, கே டிவி, ஜெயா டிவி, பாலிமர் டிவி, தந்தி டிவி, ராஜ் டிவி என பெரும்பாலான தமிழ் சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்து இன்னொரு புதுமையை செய்யவிருக்கின்றனர். ஒரு தமிழ் படத்தின் டிரைலர் ஒரே நேரத்தில் எல்லா முன்னணி டிவி சேனல்களிலும் ஒளிபரப்பப்படுவது இதுதான் முதல் முறையாம்.

இது குறித்து ’ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவன அதிகாரி விஜய் சிங் கூறும்போது,
‘’ஷாருக்கான் நடிப்பில் நாங்கள் தயாரித்த, ’மை நேம் ஈஸ் கான்’ படத்தின் டிரைலரை முதன் முதலாக ஒரே நேரத்தில் எல்லா ஹிந்தி சேனல்களிலும் ஒளிபரப்ப செய்து புதுமை செய்தோம். அதற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அது மாதிரி ‘ராஜா ராணி’ படத்தின் டிரைலரை பெரும்பாலான தமிழ் சேனல்களில் ஒரே நேரத்தில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறோம். இதற்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;