அதிக விலை போன ஷாம் படம்!

அதிக விலை போன ஷாம் படம்!

செய்திகள் 23-Aug-2013 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’முகவரி’, ’சிட்டிசன்’ போன்ற பல படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியிருக்கும் படம் ’6’. ஷாம், பூனம் கௌர் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஷாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ஷாம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றிய பெறாத நிலையில், ஷாம் இந்த படத்தில் அதிக சிரத்தை எடுத்து, கடுமையாக உழைத்து நடித்திருப்பதோடு, இந்த படத்தை ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை ’ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன்’ தமிழகம் முழுக்க வெளியிட, இந்த படத்தின் சாட்லைட் உரிமையை ஜீ தமிழ் டிவி பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;