ஆர்யா - விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!

ஆர்யா - விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!

செய்திகள் 22-Aug-2013 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'பேராண்மை’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கும் படம் ‘புறம்போக்கு’. இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ‘யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. முதலில் இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவியும், ஜீவாவும் இணைந்து நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ’ஜெயம்’ ரவியுடன் ஜீவாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இப்போது ’ஜெயம்’ ரவிக்கு பதிலாக ஆர்யா நடிப்பதாகவும், அவருடன் விஜய் சேதுபதியும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் இதுவரை பார்த்திராத பாத்திரங்களில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார்களாம்.

‘ஈ’ படத்தின் மூலம் ஜீவாவையும், ‘பேராண்மை’ படத்தின் மூலம் ‘ஜெயம்’ ரவியையும் மாறுபட்ட கோணத்தில் காட்டி, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். அவர் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதியை எப்படி காட்டப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;