‘யு’ வாங்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

‘யு’ வாங்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

செய்திகள் 21-Aug-2013 5:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில, பி.மதன் தயாரித்திருக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து முடிந்துள்ள இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு க்ளீன் ‘யு’ சர்டிஃபிகட் வழங்கியுள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் 6—ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ’எதிர்நீச்சல்’ வெற்றிப் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்த படம் மீது பரவலான ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வருத்தபடாத வாலிபர் சங்கம் பாடல் பதிவு


;