திட்டமிட்டபடி ‘மெட்ராஸ் கஃபே’ ரிலீசாகுமா?

திட்டமிட்டபடி  ‘மெட்ராஸ் கஃபே’ ரிலீசாகுமா?

செய்திகள் 21-Aug-2013 3:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜான் ஆப்ரகாம் ஹிந்தியில் தயாரித்து, நடித்துள்ள படம் ’மெட்ராஸ் கஃபே’. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள், இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் ’மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் திட்டமிட்டபடி வருகிற 23-ஆம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது! ஆனால் ‘‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தை மக்களிடம் திட்டமிட்டபடி கொண்டு போய் சேர்ப்போம், தணிக்கைக் குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது’’ என்று நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் இந்த படத்தை இயக்கியுள்ள சூஜித் சிர்கார் கூறியுள்ளனர்.

இந்த படத்தில் ஜான் ஆப்ரகாமுடன் நடிகை நர்கீஸ் பக்ரி, ரிஷி கன்னா உள்ளிட்டவர்கள் நடித்திருக்க, மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது படம். இந்த படத்தில் தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகளின் போராட்டங்களையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் விதமாக பல காடசிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தான் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, இந்த படம் சம்பந்தமாக வரும் பத்திரிகை விளம்பரங்களில் 23-ஆம் தேதி படம் ரிலீஸ் என்று குறிப்பிட்டிருப்பது தவிர எந்தெந்த திரையரங்குகளில் படம் ரிலீஸாகிறது என்ற விவரங்கள் காணவில்லை.

விஜய்யின் ‘தலைவா’வுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்து படம் நேற்றுதான் வெளியானது. அடுத்து… ’மெட்ராஸ் கஃபே’ என்ன நடக்கும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;