’பட்டத்து யானை’க்கு அடுத்து மதகஜராஜா!

’பட்டத்து யானை’க்கு அடுத்து மதகஜராஜா!

செய்திகள் 21-Aug-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம் ’மதகஜராஜா’. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்க், விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுமாதிரி ‘மதகஜராஜா’வும் கலகலப்பான காமெடி படமாக அமைந்திருக்கிறதாம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து, படம் அடுத்த மாதம் 6-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

‘பட்டத்து யானை’ படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தினை விஷாலின் சொந்த பட நிறுவனமான ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;