’தலைவா’ டிக்கெட் வின்னர்ஸ்

’தலைவா’ டிக்கெட் வின்னர்ஸ்

செய்திகள் 20-Aug-2013 4:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘தலைவா’ படத்தை முதல் நாள், முதல் ஷோவாக பார்க்கும் விதமாக நமது இணையதள வாசகர்களுக்காக ஒரு போட்டி வைத்திருந்தது அல்லவா? அந்த போட்டியில் ஏராளமான இணையதள வாசகர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு போட்டி சம்பந்தமான மெசேஜ்-களை அனுப்பியிருந்தனர். அறிவித்திருந்தபடி அவர்களிலிருந்து 50 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இன்று வெளியான ’தலைவா’ படத்தினை கண்டு களிக்கும் வாய்ப்பினை ‘டாப் 10 சினிமா’ ஏற்படுத்திக் கொடுத்தது.

சென்னையிலுள்ள சங்கம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் தேர்வாகியிருந்த வாசகர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டு, பெப்சி மற்றும் பாப்கானை ருசித்தவாறு ’தலைவா’ படத்தினை கண்டு மகிழ்ந்தனர்! அத்துடன் இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த ’டாப் 10 சினிமா’வுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;