ஜெய்-யை பாராட்டிய ‘துப்பாக்கி’ இயக்குனர்!

ஜெய்-யை பாராட்டிய ‘துப்பாக்கி’ இயக்குனர்!

செய்திகள் 20-Aug-2013 3:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரஜா ராணி’. அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தின் ‘ஹே பேபி…’ என்ற பாடலை இன்று சூரியன் எஃப்.எம். வெளியிட்டது. இதனை தொடர்ந்து வருகிற 23-ஆம் தேதி படத்தின் மொத்த பாடல்களையும் பிரம்மாண்ட விழாவில் வெளியிட இருக்கிறார்கள்.

இந்நிலையில் ’ராஜா ராணி’ படத்தின் ஒரு சில பிரத்தியேக காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ், படத்தின் இரு கதாநாயகர்களில் ஒருவரான ஜெய்யை புகழ்ந்துள்ளார். ‘’என்னுடைய ‘எங்கேயும் எப்போதும்’ பத்திலேயே ஜெய்யின் நடிப்பு என்னை ரொம்பவும் கவர்ந்தது. மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான, திறமையான நடிகர் ஜெய். என்னுடைய கணிப்பின் படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர். நிச்சயம் பிரகாசிப்பார். ‘ராஜா ராணி’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் அவருக்கென மிகவும் பொருத்தமாக உள்ளது’’ என்று ஜெய் பற்றி கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;