விவாகரத்து பெற்றார் மம்தா மோகன்தாஸ்!

விவாகரத்து பெற்றார் மம்தா மோகன்தாஸ்!

செய்திகள் 20-Aug-2013 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’ உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். நடிகையாக மட்டுமல்லாமல், ‘டாடி மம்மி வீட்டில் இல்லை… தடைபோட யாரும் இல்லை…’ போன்ற பல பாடல்களை பாடி, சிறந்த ஒரு பாடகியாகவும் திரையுலகில் வலம் வந்த மம்தா மோகன்தாஸ் கொச்சியை சேர்ந்த தனது குடும்ப நணபர் பிரஜித் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார்.

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் ஒரு மனதாக பிரிந்து விட முடிவு செய்து, சென்ற ஜனவரி மாதம் கொச்சியிலுள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்திருந்தனர். இவர்களது மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம், இருவருக்கும் நேற்று விவாக ரத்து வழங்கியது.

விவாக ரத்து பெற்ற மம்தா மோகன்தாஸ் இனி நடிப்பில் அதிக கவனம் செலுத்த இருக்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;