’சுட்டகதை’ தயாரிப்பாளரின் மனிதநேயம்!

’சுட்டகதை’ தயாரிப்பாளரின் மனிதநேயம்!

செய்திகள் 20-Aug-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘சுட்டகதை’, ’நளனும் நந்தினியும்’, ’கொலை நோக்கு பார்வை’ ஆகிய படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் திரைப்படங்களை தயாரிப்பதோடு, ஒரு சில மனிதநேய பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருபவர்.

சென்னை சவீதா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் அமைப்பும், சென்னை பாரதிராஜா மருத்துவமனையும் இணைந்து இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம் ஒன்றை நடத்துகின்றனர். இதில் முதல் கட்டமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, இதய கோளாறுள்ள 10 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யவிருக்கின்றனர். இந்த சிகிச்சைக்கான செலவை இந்த மாத கடைசியில் வெளியாகும் ‘சுட்டகதை’ படத்தின் வருமானத்திலிருந்து வழங்கவுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இது போன்று தனது தயாரிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இல்லாதவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்ய இருக்கிறாராம் ரவீந்தர் சந்திரசேகர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - டிரைலர்


;